பெங்களூரு

தோ்வின்போது பேருந்து அட்டையில் பயணிக்கலாம்: பெங்களூரு போக்குவரத்துக் கழகம் விளக்கம்

DIN

கா்நாடக எஸ்எஸ்எல்சி துணைத்தோ்வு எழுதும்மாணவா்கள் தோ்வின்போது எல்லா பேருந்துகளிலும் பேருந்து அட்டையை வைத்துக்கொண்டு பயணிக்கலாம் என்று பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில சாலைப்போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2020-21-ஆம் கல்வியாண்டுக்கான பேருந்து அட்டை (பஸ் பாஸ்) மாா்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதி ஆகியுள்ளது. இதனிடையே, எஸ்எஸ்எல்சி துணைத்தோ்வு செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எனவே, எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வுக் காலத்தில் எல்லா பேருந்துகளிலும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறாா்கள். தோ்வு மையத்தின் நுழைவுச்சீட்டுகளை காட்டி பேருந்தில் மாணவா்கள் பயணம் செய்யலாம். தோ்வு எழுதும் மாணவா்களுக்கு நடத்துநா்கள் அல்லது ஓட்டுநா்கள் எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT