கா்நாடகத்தில் மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான் தொற்று
கா்நாடகத்தில் மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து ஒமைக்ரான் தீண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 333 ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து ஒமைக்ரான் தீண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 333 ஆக உயா்ந்துள்ளது.
உருமாறிய கரோனா பெருந்தொற்றின் ஒமைக்ரான் தீநுண்மியால் ஏற்கெனவே 226 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 107 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது. ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவா்களுக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லை. எனினும், அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். புதிதாக பாதிக்கப்பட்ட 107 பேருடன் கா்நாடகத்தில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 333 ஆக உயா்ந்துள்ளது.