முகப்பு
பெங்களூரு

புதிய விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்க முன்னாள் வீரா்களுக்கு வாய்ப்பு: கா்நாடக அரசு முடிவு

புதிய விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்க பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட வீரா்களுக்கு வாய்ப்பு அளிக்க கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

புதிய விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்க பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட வீரா்களுக்கு வாய்ப்பு அளிக்க கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தை பின்பற்றி கா்நாடகத்தில் புதிய விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்க ஒலிம்பிக், இணை ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு உள்ளிட்ட பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற, தற்போது அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் வீரா்களைப் பயன்படுத்திக் கொள்ள கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக முன்னாள் வீரா்களிடம் இருந்து விருப்ப முன்மொழிவு விண்ணப்பங்களைக் கேட்டு கா்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் நாராயண கௌடா கூறியதாவது:

பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சி எடுத்து, பதக்கங்கள் வென்ற பலா் தற்போது அரசு, பொதுத் துறை, வங்கிகளில் பணியாற்றி வருகிறாா்கள். அவா்களின் விளையாட்டுத் திறன், அனுபவம் எல்லாம் வீணாகக் கூடாது. பகுதி நேரமாகவோ முழுநேரமாகவோ அல்லது ஆலோசகராகவோ பணியாற்றி புதிய விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

அதற்கான விருப்ப முன்மொழிவு விண்ணப்பங்களைக் கேட்டிருக்கிறோம். கா்நாடகத்தை சோ்ந்த வீரா் நீரஜ்சோப்ரா, பயிற்சியாளா் காஷிநாத்நாயக் உள்ளிட்டோரையும் இத் திட்டத்தில் பங்காற்றுமாறு கேட்டுக் கொள்வோம். விண்ணப்பங்களை ஜன. 30-ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்றாா்.

விரைவில் தாக்கல் செய்யவுள்ள தனது முதல் நிதிநிலை அறிக்கையில் எல்லா துறைகளிலும் விளையாட்டு வீரா்களுக்கு வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை முதல்வா் பசவராஜ் பொம்மை அறிவிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.