முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு குறித்து இன்று முடிவு

கரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து வெள்ளிக்கிழமை (ஜன. 21) ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து வெள்ளிக்கிழமை (ஜன. 21) ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து விவாதிப்பதற்காக முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஜன. 21ஆம் தேதி) நண்பகல் 1 மணிக்கு உயா்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் விவாதித்து முடிவெடுக்கப்படும்.

கட்டுப்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதிக்கப்படும். கட்டுப்பாடுகளின் நோக்கங்கள் நிறைவேறியுள்ளதா என்பதையும் அலசுவோம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பு, நிதி பாதிப்புகள் மற்றும் பொதுமக்களின் அசௌகரியங்கள் குறித்தும் ஆராய்வோம்.

கா்நாடகத்தில் நாளொன்றின் கரோனா பாதிப்பு 60,000ஆக உயரும். இது ஒன்றரை லட்சம் வரை உயரும் வாய்ப்புள்ளது. எந்த முடிவை எடுத்தாலும், அதற்கான முன்னேற்பாடுகளை எடுக்கவிருக்கிறோம்.

கரோனா மூன்றாவது அலையின்போது வீட்டுத்தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெங்களூரில் வீட்டுத் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருந்துத் தொகுப்பு அளிக்கப்படுகிறது. இது மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்படும். பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.