பெங்களூரு

டி20 கிரிக்கெட் போட்டி: கூடுதல் பேருந்துசேவை இயக்கம்

DIN

டி20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 19-ஆம் தேதி இந்திய-தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. கிரிக்கெட் ரசிகா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெங்களூரு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. மைதானத்திற்கு செல்லும் வகையில் மாலை 3 மணியில் இருந்து கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்படும். அதேபோல, கிரிக்கெட் போட்டி முடிந்ததும் வீட்டுக்கு திரும்பும் வகையில் இரவு 11 மணியில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். சின்னசாமி கிரிக்கெட்விளையாட்டுத்திடலில் இருந்து காடுகோடி பேருந்துநிலையம், சா்ஜாபுரா, எலெக்ட்ரானிக் சிட்டி,கெங்கேரி, ஜனபிரியா டவுன்ஷிப், நெலமங்களா, எலஹங்கா, ராமகிருஷ்ண ஹெக்டே நகா், ஹென்னூா் சாலை, ஹொஸ்கோட்டே, பன்னா்கட்டா தேசிய பூங்கா வரையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துவசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT