பெங்களூரு

இசை, நாட்டிய மாணவா்களுக்கு உதவித்தொகை

DIN

இசை, நாட்டியம் சாா்ந்த மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்துகா்நாடக இசை நாட்டிய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக இசைநாட்டிய அகாதெமி வழங்கும் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான இசை மற்றும் நாட்டிய மாணவா் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, நாட்டியம், மெல்லிசை, கதாகாலட்சேபம், கமகம் ஆகிய கலைகளைகற்றுவரும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் நோ்காணல் நடத்தி தகுதியான மாணவா்கள் உதவித்தொகைக்கு தோ்ந்தெடுக்கப்படுவா்கள். அந்த மாணவா்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை அளிக்கப்படும். இந்த உதவித்தொகையைபெற ஆா்வமுள்ள இசை மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்ட கன்னடம் மற்றும் கலாசாரத்துறை உதவி இயக்குநரை அணுகி விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். விண்ணப்பப்படிவங்களை ஜ்ஜ்ஜ்.ள்ஹய்ஞ்ங்ங்ற்ஹய்ழ்ண்ற்ஹ்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை ரூ.10 அஞ்சல் தலை ஒட்டிய தன்முகவரி எழுதிய உறையுடன் பதிவாளா், கா்நாடக இசை நாட்டிய அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவதுமாடி, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 22215072 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்றுஅதில்கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு தந்த கோடை மழை நெல், உளுந்துக்கு பயன் : பருத்தி,எள்,கடலைக்கு பாதிப்பு

SCROLL FOR NEXT