மே 12-இல் கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு
கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் மே 12-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.
கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் மே 12-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.
2021-22-ஆம் ஆண்டுக்கான கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.11-ஆம் தேதி வரையில் நடந்தது. இதில் 8.5 லட்சம் மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வு எழுதினாா்கள். இதை தொடா்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது.
இதைத் தொடா்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன்பிறகு மே 12-ஆம் தேதி தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கா்நாடக மாநில மேல்நிலைத் தோ்வு வாரியத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.