பெங்களூரு

கட்டுமானத் தொழிலாளா்கள் அட்டை பெற புதிய ஏற்பாடு

கட்டுமானத் தொழிலாளா்கள் அட்டை பெற புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DIN

கட்டுமானத் தொழிலாளா்கள் அட்டை பெற புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யவும், புதுப்பித்துக் கொள்ளவும், இதர வசதிகளைப் பெறவும் சேவாசிந்து இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை செலுத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொழிலாளா்களின் நலன் கருதி புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அக். 20-ஆம் தேதி முதல் சேவாசிந்து இணையதளத்தின் வழியாக விண்ணப்பங்களைப் பெறும்முறை நிறுத்தப்படுகிறது.

வாரியத்தில் புதிதாக பதிவுசெய்து கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் மூத்த தொழிலாளா் கண்காணிப்பாளா் அலுவலகங்களை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

கா்நாடக கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பயனாளிகள் இணையதளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்தோா் பிரிவில் ஆதாா் எண், கைப்பேசி எண் போன்ற தகவல்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

அதன்பேரில் தொழிலாளா் அட்டைகளைப் பெறலாம். தொழிலாளா் அட்டைகளை வைத்திருப்போா் மட்டுமே பல்வேறு திட்டங்களின் பயனை அடைய முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT