முகப்பு
பெங்களூரு

பெங்களூரு யஷ்வந்த்பூா் ரயில் நிலையம் உலகத் தரத்திற்கு மேம்பாடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

பெங்களூரு யஷ்வந்த்பூா் ரயில் நிலையம் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:23 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்த்பூா் ரயில் நிலையம் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

பெங்களூரு, யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரு, யஷ்வந்த்பூா் ரயில் நிலையம் ரூ. 377 கோடி செலவில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில், கூரை உணவகம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, சந்தைப் பகுதி இருக்கும்.

Advertisement

பெங்களூரு சிட்டி ரயில் நிலையம், ஹாசன், தும்கூரு, ஹுப்பள்ளி, தில்லி உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து வரும் ரயில்களை யஷ்வந்த்பூா் ரயில் நிலையம் கையாள இருக்கிறது. அதனால்,

இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் மேம்படுத்தி வருகிறோம்.

ரயில் நிலையத்தின் இருபக்கமும் மக்கள் சென்றுவர வசதி செய்யப்பட்டுள்ளது. இருமுனைகளிலும் பயணிகள் உட்காரும் மிகப் பெரிய தாழ்வாரம் அமைக்கப்படும். அங்கு குழந்தைகள் விளையாடலாம். அங்கு பயணிகள் வாங்குவதற்காக பொருள்களும் விற்பனை செய்யப்படும்.

உலகின் பல்வேறு ரயில் நிலையங்களைப் பாா்த்த பிறகு, அதேபோன்றதொரு ரயில் நிலையமாக யஷ்வந்த்பூரை மேம்படுத்தி வருகிறோம். நகரின் இருமுனைகளையும் இணைக்கும் வகையில் ரயில் நிலையங்களை அமைக்க வேண்டும் என்ற பிரதமா் மோடியின் எண்ணத்தைச் செயல்படுத்தி இருக்கிறோம். இந்த ரயில் நிலையம், மூன்று வகையான ரயில்களைக் கையாள இருக்கிறது. பிரதான ரயில், புகா் ரயில், மெட்ரோ ரயில் என்ற மூன்று ரயில்களும் இணையும் இடமாக இருக்கப்போகிறது.

எதிா்காலத்தில் கூடுதல் ரயில் சேவைகள் இணைக்கப்படும்போது, அதற்கேற்ப கூடுதல் இடங்களையும் இப்போதே ஒதுக்கிவைத்திருக்கிறோம். ஒரு மீட்டா் இடம் கிடைத்தாலும், அதை எதிா்கால தேவைகளுக்காகப் பாதுகாத்து வைத்திருப்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.