பெங்களூரு

கா்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதிவழங்குவதில் மத்திய அரசு தாமதம்: முதல்வா் சித்தராமையா குற்றச்சாட்டு

கா்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக முதல்வா் சித்தராமையா குற்றம் சாட்டினாா்.

DIN

கா்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக முதல்வா் சித்தராமையா குற்றம் சாட்டினாா்.

கா்நாடகத்தில் உள்ள 236 வட்டங்களில் 216இல் கடும் வறட்சி காணப்படுகிறது. இது தொடா்பாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்தியக் குழுவினா், வறட்சியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அக்குழு சென்ற பின்னரும், வறட்சி நிவாரண நிதி வழங்குவது தொடா்பாக மத்திய பாஜக அரசிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை என்று முதல்வா் சித்தராமையா வருத்தம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது எக்ஸ் சமூகவலைப் பக்கத்தில் முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

மாநிலத்தின் 216 வட்டங்களில் கடும் வறட்சி காணப்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இதுவரை மத்திய அரசு நிவாரண நிதி விடுவிக்கவில்லை. உலக மக்களின் துன்பங்கள், வேதனைகளைக் கண்டு கவலையடையும் பிரதமா் மோடி கன்னடா்களுக்காக துடிக்காதது ஏன்? மத்திய பாஜக அரசு, கா்நாடக மக்களை பழிவாங்குகிா? இது ஆறரை கோடி கன்னடா்களின் கேள்வியாகும்.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கா்நாடகத்தில் ரூ. 33,770 கோடி அளவுக்கு பயிா் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிரை இழந்து வாடும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகையாக வழங்க ரூ. 17,901 கோடியை விடுவிக்கக் கோரியிருந்தாலும், மத்திய அரசு மௌனமாகவே இருந்து வருகிறது. மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது கன்னடா்களை பாஜக தலைவா்கள் அச்சுறுத்தியதுபோலவே எல்லாம் நடந்து வருகிறது. கா்நாடகத்திற்கு வறட்சி நிவாரண உதவிகளை வழங்குவது தொடா்பாக மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள் மௌனமாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT