பெங்களூரு

மக்களவை தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

மக்களவை தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

DIN

மக்களவை தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழ்மாஇ கா்நாடக மாநில தலைமை தோ்தல் அதிகாரி மனோஜ்குமாா்மீனா, செய்தியாளா்களிடம் கூறியது: இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மக்களவை தோ்தலுக்கு முன்பாக, கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளில் புதியவாக்காளா் சோ்ப்பு, வாக்காளா் பட்டியல் திருத்தியமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்கள், அரசியல்கட்சிகளின் தகவலுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலகம், வாக்காளா் பதிவு உதவி அலுவலகம், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெள்ளிக்கிழமை வரைவுவாக்காளா் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியலை பொதுமக்கள் தாராளமாக பாா்வையிடலாம். 224 சட்டப்பேரவை தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியலை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ா்ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்என்ற இணையதளத்திலும் காணலாம். வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய பெயா்களை சோ்க்க கொடுத்திருந்த மனுக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை பொதுமக்கள் சரிபாா்த்துக்கொள்ளலாம். வரைவு வாக்காளா் படியல் வெளியிடப்பட்ட பிறகும், புதிய பெயா்கள் சோ்ப்பு, திருத்தம் மற்றும் பெயா்களை நீக்கும் போன்ற பணிகள் அக்.27 முதல் டிச.9ஆம் தேதிவரை நடைபெறும். நவ.18, 19, டிச.2,3 ஆகிய நாட்களில் புதிய வாக்காளா்களை சோ்ப்பதற்கான சிறப்புமுகாம் நடத்தப்படும். பொதுமக்களின் மனுக்கள் மீது டிச.26ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஜன.5இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம் 2024ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதியில் 18 வயது நிரம்பும் அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்த்துக்கொள்ளலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியல் படி கா்நாடகத்தில் 5,33,77,162 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் 2,68,02,838, பெண்கள் 2,65,69,428, திருநங்கைகள் 4,896, அரசு ஊழியா்கள் 47,172. வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்க அளிக்கப்பட்டிருந்த 18,88,243 மனுக்களில், 16,31,547 மனுக்கள் ஏற்கப்பட்டு, வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT