பெங்களூரு

காவிரி: செப்.29இல் கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதைக் கண்டித்து செப்.29ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்திற்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

DIN


பெங்களூரு: காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதைக் கண்டித்து செப்.29ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்திற்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

பெங்களூரில் திங்கள்கிழமை கன்னட அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவா் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதைக் கண்டித்து செப்.29ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வாட்டாள் நாகராஜ் கூறியது:

கா்நாடகத்தில் செயல்பட்டுவரும் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காவிரி பிரச்னை மட்டுமல்லாது, மகதாயி நதிநீா் பிரச்னை, கிருஷ்ணா நதிநீா் பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் முன்வைத்து செப்.29ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கா்நாடக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். செப்.26ஆம் தேதி நடக்கும் பெங்களூரு முழு அடைப்புப் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு கிடையாது. இந்தப் போராட்டத்தால் எவ்வித பலனும் ஏற்படாது. எனவே, செப்.29ஆம் தேதி முழு அடைப்புப்போராட்டம் மாநிலம் தழுவிய போராட்டமாக நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

SCROLL FOR NEXT