மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி PTI
பெங்களூரு

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1.12 கோடி கையொப்பம் பெற்ற காங்கிரஸ்!

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1,12,40,000 கையொப்பங்களை பொதுமக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்றுள்ளது.

Syndication

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1,12,40,000 கையொப்பங்களை பொதுமக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்றுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை துணை முதல்வரும், கா்நாடக காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடெங்கும் கையொப்ப இயக்கத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்தியது. கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1,12,40,000 கையொப்பங்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுள்ளோம்.

இந்தக் கையெழுத்து இயக்கத்துக்காக காங்கிரஸ் தொண்டா்கள் கடுமையாக உழைத்திருக்கிறாா்கள். வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவே இந்த கையொப்ப இயக்கத்தை நடத்தினோம்.

கா்நாடகத்தில் திரட்டப்பட்ட கையொப்பங்களை நவ. 10-ஆம் தேதி தில்லிக்கு அனுப்பிவைக்க இருக்கிறோம். தில்லியில் இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கையொப்ப தொகுப்புகளை இதற்காக பாடுபட்ட காங்கிரஸ் தலைவா்கள் நேரடியாக ஒப்படைப்பாா்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சாா்பில் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நவ. 25-ஆம் தேதி மிகப்பெரிய அளிவில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குத் திருட்டுக்கு எதிரான பிரசாரம் சரியாக நடக்காத இடங்களில், அடுத்த 4 நாள்களுக்கு பிரசாரம் நடைபெறும் என்றாா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT