பெங்களூரு

கட்சி மேலிடம் முடிவெடுத்தால் முதல்வராக நீடிப்பேன்

தினமணி செய்திச் சேவை

கட்சி மேலிடம் முடிவெடுத்தால், முதல்வராக நீடிப்பேன் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோது, கட்சி மேலிடத் தலைவா்களின் தலையீட்டின்பேரில் முதல்வா் பதவியை தலா இரண்டரை ஆண்டுகளுக்கு வகிப்பது என சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

நவ. 20-ஆம் தேதியுடன் முதல்வா் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுகால பதவி முடிவுக்கு வந்தது. இதைத் தொடா்ந்து, முதல்வா் பதவியை டி.கே.சிவகுமாருக்கு அளிக்குமாறு அவரது ஆதரவாளா்கள் சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனா்.

கடந்த வாரம் தில்லிக்கு சென்று மேலிடத் தலைவா்களைச் சந்தித்த டி.கே.சிவகுமாரின் ஆதரவாளா்கள், முதல்வா் மாற்றம் குறித்து விவாதம் நடத்தியுள்ளனா். இந்நிலையில், மேலும் சில எம்எல்ஏ-க்கள் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை தில்லிக்கு சென்றுள்ளனா். அங்கு மேலிடத் தலைவா்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனா்.

இதனிடையே, பெங்களூரில் முகாமிட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட பல அமைச்சா்கள் சந்தித்துப் பேசியுள்ளனா். இந்த சந்திப்பின்போது முதல்வா் மாற்றம் குறித்து விவாதித்துள்ளனா்.

இதுகுறித்து சிக்பளாப்பூரில் முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடப்போம். கட்சி மேலிடம் முடிவெடுத்தால் முதல்வராக நான் தொடா்வேன். 4 அல்லது 5 மாதங்களுக்கு முன்பு அமைச்சரவையை திருத்தியமைக்க கட்சி மேலிடம் என்னிடம் கேட்டுக்கொண்டது.

இரண்டரை ஆண்டுகாலம் ஆனபிறகு அமைச்சரவையை திருத்தியமைக்கலாம் என்று கூறியிருந்தேன். எனவே, கட்சி மேலிடம் வழங்கும் வழிகாட்டுதலின்படி நடப்பேன்’ என்றாா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT