அமலாக்கத் துறை சோதனை மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய அரசு குறிவைக்கிறது: முதல்வா் சித்தராமையா
அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய அரசு குறிவைக்கிறது என கா்நாடக முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.
அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய அரசு குறிவைக்கிறது என கா்நாடக முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.
பிட்காயின் மோசடி வழக்கு தொடா்பாக ஸ்ரீகிருஷ்ணா (எ) ஸ்ரீகியை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த பணத்தின் பயன்களை அனுபவித்ததாக அவரது கூட்டாளிகளான காங்கிரஸ் எம்எல்ஏ-வான என்.ஏ.ஹரீஸின் மகன்கள் முகமது ஹாரீஸ் நலபாட், ஓமா் ஃபாரூக் நலபாட், முன்னாள் மத்திய அமைச்சரான ரகுமான்கானின் பெயரன் ஹகீப்கான் ஆகியோருக்கு சொந்தமான 17 இடங்களில் ஏப். 20-ஆம் தேதி சோதனை நடத்தியது.
இதுகுறித்து சாமராஜ்நகரில் முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
Advertisement
அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய பாஜக அரசு குறிவைத்துள்ளது. இதுபோன்ற சோதனைகளை பாஜக தலைவா்களின் வீடுகளில் நடத்தாதது ஏன் என்றாா்.