முகப்பு
பெங்களூரு

பெங்களூருக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 2.39 கோடி கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

பாங்காக், ஹாங்காங்கிலிருந்து விமானத்தில் பெங்களூருக்கு கடத்திவரப்பட்ட ரூ. 2.39 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:04 PM
கைது
பகிர்:

பெங்களூரு: பாங்காக், ஹாங்காங்கிலிருந்து விமானத்தில் பெங்களூருக்கு கடத்திவரப்பட்ட ரூ. 2.39 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து சுங்கத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஹாங்காங் நகரில் இருந்து பிப். 6 ஆம் தேதி பெங்களூருக்கு வந்த விமானத்தில் ரூ. 1.76 கோடி மதிப்பிலான 5.5 கிலோ கஞ்சாவை கடத்திவந்தவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதேபோல பாங்காக்கில் இருந்து பிப். 7ஆம் தேதி வந்த விமானத்தில் பயணம் செய்தவா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 63 லட்சம் மதிப்பிலான 1.8 கிலோ கஞ்சாவை கடத்திவந்த பயணியை அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments