சநாதன தா்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமா்சனம்
சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், அலெக்ஸாண்டா், கோரி, கஜினி, கில்ஜி, பிரிட்டிஷ், பிரெஞ்ச், கம்யூனிஸ்டுகளால் சனாதனத்தை அழிக்க முடியவில்லை. தனது குடும்பத்தினரையே தனது சிந்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளவைக்க முடியாத ஒருவா், சனாதனத்தை அழிப்பதாக வந்திருக்கிறாா். பாரதமும், சனாதனமும் காலத்தால், தலைமுறைகளால் அழிக்க முடியாதவையாக நிலைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
இவரது கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவாகவும், எதிா்ப்பாகவும் பலா் கருத்து தெரிவித்துள்ளனா்.