பயிர் காப்பீடு வழிகாட்டுதல் இல்லாததால் விவசாயிகளுக்கு நஷ்டம்
சென்னை, செப். 25: சரியான வழிகாட்டுதல் கிடைக்காததால், பயிர் காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாட
சென்னைபயிர் காப்பீடு வழிகாட்டுதல் இல்லாததால் விவசாயிகளுக்கு நஷ்டம்
சென்னை, செப். 25: சரியான வழிகாட்டுதல் கிடைக்காததால், பயிர் காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாட
சென்னை, செப். 25: சரியான வழிகாட்டுதல் கிடைக்காததால், பயிர் காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் விவசாயிகளை, அந்த இழப்பிலிருந்து பாதுகாப்பதற்காக தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நிஷா புயலால் சம்பா நெல் சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட இழப்புக்கு, தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் ரூ.651.66 கோடி இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டு, இப்போது வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் அலட்சியமான பணி காரணமாக, சாகுபடி இழப்புக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை கிடைக்காதது இப்போது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகள், ஒரு ஏக்கரில் கிடைக்கும் உத்தரவாதமுள்ள மகசூலுக்காக ரூ.10,312-க்கு காப்பீடு செய்து கொள்ளும் வசதி இருந்தது. அதற்காக ஏக்கருக்கு (தமிழக அரசின் 50 சதவீத மானியம் போக) ரூ.103 பிரிமியம் செலுத்த வேண்டும்.
உத்தரவாத மகசூலைத் தவிர கூடுதலாக ரூ.9,024-க்கு, அதாவது மொத்தம் ரூ.19,336-க்கு காப்பீடு செய்து கொள்ளும் இன்னொரு வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இத் தொகைக்கு அரசின் மானியம் போக ரூ.261 பிரிமியம் செலுத்த வேண்டும்.
ஆனால் மிகப் பெரும்பாலான விவசாயிகள் இதன்படி பிரிமியம் செலுத்தவில்லை.
கடன் தொகைக்கே காப்பீடு: பெரும்பாலான விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமே காப்பீட்டுக்கான பிரிமியத் தொகையை செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த வங்கி அலுவலர்களோ, உத்தரவாத மகசூல் மதிப்புக்கோ (ரூ.10,312), கூடுதல் மகசூல் மதிப்புக்கோ (ரூ.19,336) பிரிமியம் வசூலிக்கவில்லை. மாறாக கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு அளித்த சாகுபடி கடன் தொகைக்கு மட்டுமே பிரிமியம் வசூலித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.8,500 மட்டுமே சாகுபடி கடன் அளிக்கப்பட்டது. எனவே அதிகபட்சம் ரூ.8,500-க்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எல்லா விவசாயிகளுக்கும் ரூ.8,500 கடன் அளிக்கப்படவில்லை. மிகப் பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 அளவுக்கே கடன் அளிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.1,000 மட்டுமே கடன் பெற்ற விவசாயிகளும் ஏராளமானோர் உள்ளனர்.
வழிகாட்டுதல் இல்லாததால் பாதிப்பு: நிஷா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பாதிப்பின் தன்மைக்கேற்ப, மொத்த காப்பீட்டுத் தொகையில் 30 முதல் 90 சதவீதம் வரை இப்போது இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
70 சதவீத இழப்பீடு பெற தகுதியுடைய விவசாயி, ஒரு ஏக்கரில் கிடைக்கும் உத்தரவாத மகசூல் மதிப்பான ரூ.10,312-க்கு காப்பீடு செய்திருந்தால் ரூ.7,218-ம், கூடுதல் மகசூல் மதிப்பான ரூ.19,336-க்கு காப்பீடு செய்திருந்தால், ரூ.13,535-ம் இழப்பீடு கிடைத்திருக்கும்.
ஆனால் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5000-க்கு மட்டுமே காப்பீடு செய்த பெரும்பாலான விவசாயிள் ரூ.3,500-ம், ரூ.1,000-க்கு காப்பீடு செய்துள்ள பலர் ரூ.700-ம் மட்டுமே இழப்பீடாக பெறக் கூடிய பரிதாபமான நிலையை இப்போது டெல்டா மாவட்டங்களில் காண முடிகிறது.
காப்பீட்டு நிறுவனம் அனுமதித்துள்ள தொகைக்கு காப்பீடு செய்திருந்தால் விவசாயிகளுக்கு அதிகமான இழப்பீட்டுத் தொகை கிடைத்திருக்கும்.