மாணவர்களை புறக்கணிக்கும் மாநகர பஸ்
பொன்னேரி, பிப். 25: மாணவர்களை கண்டால் மாநகர பஸ்கள் பஸ் நிறுத்தத்திலேயே நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ÷பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள மெதூர் கிராமத்தில் உள்ள அரசு
சென்னைமாணவர்களை புறக்கணிக்கும் மாநகர பஸ்
பொன்னேரி, பிப். 25: மாணவர்களை கண்டால் மாநகர பஸ்கள் பஸ் நிறுத்தத்திலேயே நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ÷பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள மெதூர் கிராமத்தில் உள்ள அரசு
பொன்னேரி, பிப். 25: மாணவர்களை கண்டால் மாநகர பஸ்கள் பஸ் நிறுத்தத்திலேயே நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள மெதூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் மாநகர பஸ்கள் நிற்பதில்லை எனவும் இதன் காரணமாக அப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக அப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.÷இப் பள்ளியில் திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், காவல்பட்டி, கோளூர், அரசூர், பிரளயம்பாக்கம், ஆவூர், முல்லைநகர், அச்சரப்பள்ளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
÷சென்னையை சுற்றிலும் மட்டும் இயக்கப்பட்டு வந்த மாநகர பஸ்கள் செல்லும் தூரத்தை அதிகப்படுத்தி இயக்க அரசு உத்தரவிட்டதன் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, பழவேற்காடு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
÷ஏற்கெனவே மேற்கண்ட ஊர்களுக்கு விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.÷இதில் மாதவரம் மாநகர போக்குவரத்து பணிமனையில் இருந்து செங்குன்றம்-பழவேற்காடு வழித்தடத்தில் பொன்னேரி வழியாக அதிக அளவிலான மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.÷இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த பஸ்கள் மெதூர் அரசு உயர் நிலைப்பள்ளி எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை. இதன் காரணமாக பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ÷
அதே நேரத்தில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட பஸ்கள் அனைத்தும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு மாணவர்களை ஏற்றி செல்கின்றன. ÷எனவே பள்ளி மாணவர்கள் நலன் கருதி மெதூர் அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் நிறுத்த்தில் மாநகர பஸ்களை நிறுத்தவும் அதில் மாணவர்களை ஏற்றி செல்லவும் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.