ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி, ஜன. 8: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தினர். 4.1.2011 ஊதிய
பண்ருட்டி, ஜன. 8: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தினர்.
4.1.2011 ஊதிய உயர்வு அறிவிப்பு மூலம் பல்வேறு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியைகளுக்கு அடிப்படை சம்பளத்தில் மாதமொன்றுக்கு ரூ.4,750 குறைத்து வழங்கப்படுவதாக கூறி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டாரத் தலைவர் தி.கணபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் ச.ஜீவானந்தம், நகரத் தலைவர் டி.குமுதவல்லி, செயலர் கோ.ராஜாராம், மாவட்டத் துணைத் தலைவர் ப.சீனுவாசன், வட்டார செயலர் ரத்தின.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் ஜி.காந்திமதி, அண்ணா கிராமம் வட்டாரத் தலைவர் வே.ஜோசப் ஸ்டான்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்டாரப் பொருளாளர் செü.நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.