முகப்பு
சென்னை

ஒட்டர், போயர் மக்களுக்கு தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ் கோரிக்கை

விழுப்புரம், மார்ச் 14: தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒட்டர், போயர் மக்களுக்கு பண்டி அல்லது கொட்டா என்று தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பண்டி, கொட்டா சமூக மக்கள் பேரவை மாநாட்டில் தீர்மானம்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:37 AM
பகிர்:

விழுப்புரம், மார்ச் 14: தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒட்டர், போயர் மக்களுக்கு பண்டி அல்லது கொட்டா என்று தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பண்டி, கொட்டா சமூக மக்கள் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக ஒட்டன்காடுவெட்டியில் 2010 டிசம்பர் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட ஏ. நாகப்பன் வழக்கு தொடர்பான குற்றவாளி யார்? என்று தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மத்திய புலனாய்வு (சி.பி.ஐ.) விசாரணை செய்து உண்மைக் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

நிகழ்ச்சிக்கு பண்டி, கொட்டா சமூக மக்கள் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ஸ்ரீதரசேகர் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் ஆ. வெங்கடேஷ், ரா. கண்ணன், கா.சிவக்குமார், க. ஆறுமுகம், சு. கருணாநிதி மற்றும் இந்திய சமூக நீதிப் பேரவையின் நிறுவன அமைப்பாளர் ஆ.பா. கெüதமசித்தார்த்தன், தகவல் மற்றும் நடவடிக்கைக்கான ஆய்வாளர் கருப்பன்சித்தார்த்தன் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.