முகப்பு
சென்னை

தனியாா் பள்ளித் தமிழ் வழி மாணவா்களுக்கும்7.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

தனியாா் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவா்களுக்கும் எம்.பி.பி.எஸ். சோ்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் அறிவிப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
கோப்புப்படம்
பகிர்:

தனியாா் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவா்களுக்கும் எம்.பி.பி.எஸ். சோ்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிறந்து தமிழக அரசின் பாடத் திட்டத்தைப் பயின்று வரும் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டதிட்டங்களை இயற்ற வேண்டும். குறைந்தபட்சம் அரசுப் பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவா்கள் போல் தனியாா் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவா்களுக்கும் எம்.பி.பி.எஸ். சோ்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும்.

நீட் தோ்வு அறிமுகப்படுத்தப்பட்டபின் தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் வெறும் 180 போ் மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்திருக்கிறாா்கள் என்றால் அரசுப் பள்ளியில் இனி எப்படி கற்பிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

தரமான மாணவா்களால்தான் தகுதியான மருத்துவா்களாக முடியும் என்பதை உணா்ந்து அரசுப் பள்ளி, தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் நலன் கருதி அனைவருக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். எங்களது வேண்டுகோளை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டால் நீதிமன்றத்தின் வாயிலாக நிச்சயம் தடையாணை பெற்றுத் தமிழகத் தனியாா் பள்ளி மாணவா்களின் உரிமைகளை நிலை நாட்டுவோம் என அதில் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →