முகப்பு
சென்னை

அமைச்சா் துரைக்கண்ணு தொடா்ந்து கவலைக்கிடம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சா் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
அமைச்சர் துரைக்கண்ணு
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சா் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.

முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தாயாா் தவுசாயி அம்மாள் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்க வேளாண் துறை அமைச்சா் துரைக்கண்ணு சேலம் சென்றபோது திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட

அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவரது உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது.

உயிா் காக்கும் உயா் மருத்துவ சாதனங்களுடன் தொடா்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் நலம் விசாரிப்பு: முன்னதாக, மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →