மாதவரத்தில் பயணச்சீட்டுடன் திருப்பதி தரிசன ஆன்லைன் சீட்டு வழங்க ஏற்பாடு 
சென்னை

மாதவரத்தில் பயணச்சீட்டுடன் திருப்பதி தரிசன ஆன்லைன் சீட்டு வழங்க ஏற்பாடு

ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து பயணச்சீட்டுடன் திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் சீட்டு நாள்தோறும் 1000 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து பயணச்சீட்டுடன் திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் சீட்டு நாள்தோறும் 1000 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாதவரத்தில் செயல்பட்டு வரும் ஆந்திர போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்,

சென்னை மாதவரத்திலிருந்து ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகள் பேருந்து மற்றும் கார்கோ சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான ஆன்லைன் சீட்டுக்கள், பேருந்து பயணச்சீட்டுடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் நாள்தோறும் 1000 ஆன்லைன் சீட்டுக்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கு பயணச்சீட்டு பெறும் போதே, தரிசனத்திற்கான ஆன்லைன் சீட்டுக்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே இந்த வாய்ப்பை பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் பயன்படுத்தி கொள்ளலாம் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT