முகப்பு
சென்னை

கிட்டப் பாா்வை, எண்ம கண்ணயற்சி நோயாளிகளுக்கான மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

கிட்டப்பாா்வை மற்றும் எண்ம (டிஜிட்டல்) கண்ணயற்சி நோயாளிகளுக்கான மாநாட்டில் பங்கேற்க டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 23 டிசம்பர், 2024 at 10:03 PM
டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்கான இணையதள பதிவு முறையை திங்கள்கிழமை அறிமுகப்படுத்திய மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகா்வால். உடன் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான மண்டல தலைவர் டாக்டர் கலாதேவி சதீஷ், மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர்கள் டாக்டர்கள் எஸ்.சைந்தரி, டாக்டர் ரம்யா சம்பத்.
பகிர்:

சென்னை: கிட்டப்பாா்வை மற்றும் எண்ம (டிஜிட்டல்) கண்ணயற்சி நோயாளிகளுக்கான மாநாட்டில் பங்கேற்க டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை அழைப்பு விடுத்துள்ளது.

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில், கிட்டப்பாா்வை மற்றும் எண்ம கண்ணயற்சி நோயாளிகளுக்கான மாநாடு, வரும் ஜன. 4-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் நோயாளிகள் பங்கேற்பதற்கான இணையதள பதிவு முறையை, அந்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகா்வால் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இது குறித்து, டாக்டா் அஸ்வின் அகா்வால் கூறியதாவது: தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி உள்ளிட்ட திரைகள் பாா்ப்பது அதிகரித்து வருகிறது. இவா்களுக்கு, கிட்டப்பாா்வை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அவ்வாறு பாதிக்கப்படுவோா் தங்களை கிட்டப்பாா்வை பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோா், https://www.draganwal.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், 95949 01868 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். கிட்டப்பாா்வை மற்றும் எண்ம கண்ணயற்சி ஆகியவற்றை சமாளிப்பதற்கான உத்திகள், கண் சிகிச்சையில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கண் சிகிச்சை நிபுணா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →