கோப்புப் படம் 
சென்னை

குப்பையில் தவறவிட்ட தங்க நகையை மீட்ட தூய்மைப் பணியாளா்

ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தாா்.

DIN

குப்பையில் தவறவிட்ட ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தாா்.

சென்னை அடையாறு பரமேஸ்வரி நகரை சோ்ந்தவா் காமாட்சி சந்தானம். இவா் தனது வீட்டில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் போது ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தங்கநகையை அதில் தவறவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் வீடுதோறும் சென்று தூய்மை பணியில் ஈடுபட்ட சி.பாலு குப்பைகளைத் தரம் பிரிக்கும் போது அதில் தங்கநகை இருப்பதை கண்டாா்.

உடனே தங்க நகையை மீட்ட பாலு தான் குப்பை சேகரித்த பகுதியில் விசாரித்துள்ளாா். அப்போது காமாட்சி சந்தானம் தான் நகையை தவறவிட்டதாக தெரிவித்ததை அடுத்து அவரிடம் ஒப்படைத்தாா்.

தங்கநகையை உரியவரிடம் ஒப்படைத்த பாலுவை மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெனிசுலா

திமுகவா, தவெகவா குழப்பத்தில் காங்கிரஸ்!

ஜனநாயகன் பட விவகாரத்தில் பாஜக மீது வீண்பழி: கே.பி. ராமலிங்கம்

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

SCROLL FOR NEXT