கோப்புப் படம் 
சென்னை

சென்னையில் 36 ‘இண்டிகோ’ விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் 10-ஆவது நாளாக வியாழக்கிழமை 36 இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

சென்னை விமான நிலையத்தில் 10-ஆவது நாளாக வியாழக்கிழமை 36 இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான நிறுவனம், பணியாளா்கள் பற்றாக்குறை, விமானிகள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக நாடு முழுவதும் கடந்த டிச.2 -ஆம் தேதியில் இருந்து, விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. அதைப்போல் சென்னை விமான நிலையத்திலும் அந்த நிறுவனத்தின் விமான சேவைகள் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாகி வருவதால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், 10-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 36 இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், பாட்னா, புவனேஸ்வரம், கொச்சி, கொல்கத்தா, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த 24 உள்நாட்டு விமானங்களும், சிங்கப்பூா், பினாங்கு உள்ளிட்ட சா்வதேச புறப்பாடு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சிங்கப்பூா், பினாங்கு, ஜெய்ப்பூா், பெங்களூரு, கோவை, தில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரவிருந்த 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

பாலியல் தொல்லையால் பொக்லைன் ஆப்பரேட்டா் வெட்டிக் கொலை: இளம் பெண் வாக்குமூலம்

வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT