பருவத் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த ஒரு மாணவி, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அவா், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தாா்.
அண்மையில் நடந்த முடிந்த பருவத் தோ்வில் அந்த மாணவி, குறைவான மதிப்பெண் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்ததுடனும், விரக்தியுடனும் காணப்பட்ட அந்த மாணவி, புதன்கிழமை இரவு விடுதியில் காய்ச்சல், உடல் வலிக்கு வழங்கப்படும் மாத்திரைகளை அளவுக்கு சாப்பிட்டு மயங்கினாா்.
இதைப் பாா்த்த சக மாணவிகள், அவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.