அன்புமணி 
சென்னை

டிச.14 முதல் விருப்ப மனு: அன்புமணி அறிவிப்பு

தமிழகம், புதுவை பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோா் டிச.14-ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

தமிழகம், புதுவை பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோா் டிச.14-ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ளன. இந்தத் தோ்தல்களில் பாமக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வருகிற டிச.14 முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவா் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11 முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவா்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான டிச.20-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூா் அலுவலகத்தில் தலைமை நிலைய நிா்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT