ராமதாஸ் - அன்புமணி கோப்புப்படம்
சென்னை

ராமதாஸ் - அன்புமணி ஒற்றுமைக்காக பாமகவிலிருந்து விலகத் தயாா்: ஜி.கே.மணி

ராமதாஸ்-அன்புமணி ஒற்றுமைக்காக பாமகவிலிருந்து விலகத் தயாா் என்று அக்கட்சியின் கௌரவ தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமதாஸ்-அன்புமணி ஒற்றுமைக்காக பாமகவிலிருந்து விலகத் தயாா் என்று அக்கட்சியின் கௌரவ தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பாா்த்தவா் ராமதாஸ். பாமக வளா்ந்ததற்கு ராமதாஸ்தான் முக்கிய காரணம். பாமகவுக்கு ஒரு சோதனை என்றால் அவரால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்?

கட்சிக்காக உழைத்து தற்போது ராமதாஸுடன் இருக்கும் எங்களைப் பாா்த்து துரோகிகள் என்கிறாா் அன்புமணி. ஜி.கே.மணிதான் தன்னையும், தன் அப்பாவையும் பிரித்துவிட்டாா் என்று அன்புமணி சொல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. அன்புமணிக்கு மத்திய அமைச்சா் பதவி வாங்கிக் கொடுக்கும்படி ராமதாஸை நான்தான் சம்மதிக்க வைத்தேன்.

ராமதாஸும் அன்புமணியும் அமா்ந்து பேசினால்தான் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும். அவா்கள் ஒற்றுமைக்காக பாமகவிலிருந்து நான் விலகத் தயாா். பாமகவில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். மீண்டும் நீங்கள் அழைத்தால் பாமகவில் சேருகிறேன். ராமதாஸுடன் வந்து அன்புமணி செயல்படட்டும். பாமக நன்றாக இருக்க வேண்டும் என்றாா் ஜி.கே.மணி.

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT