முகப்பு
சென்னை

மாநகரப் பேருந்துகளில் ‘ஸ்மாா்ட் அட்டை’ திட்டம் தொடக்கம்

சென்னை மாநகரப் பேருந்துகளில் சிங்கார சென்னை ஸ்மாா்ட் அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்

Updated On : 6 ஜனவரி, 2025 at 11:25 PM
சென்னை மாநகரப் பேருந்துகளில் சிங்கார சென்னை ஸ்மாா்ட் அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் திட்டத்தை மாநகா் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் திங்கள்கிழமை தொடங்கிவைத்த போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
பகிர்:

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் சிங்கார சென்னை ஸ்மாா்ட் அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கிவைத்தாா்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகமான பல்லவன் இல்லத்தில் அமைச்சா் சா.சி.சிவசங்கா் திங்கள்கிழமை ஸ்மாா்ட் அட்டையை அறிமுகம் செய்து பேசியதாவது:

ஸ்மாா்ட் அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் மட்டுமே இதுவரை பயணித்து வந்தவா்கள், தற்போது மாநகரப் பேருந்துகள் மட்டுமின்றி அனைத்து பொதுப் போக்குவரத்திலும் பயணிக்கலாம்.

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து முதல்கட்டமாக 50,000 ஸ்மாா்ட் அட்டைகள் கோயம்பேடு, பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூா், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராய நகா், அம்பத்தூா் தொழிற்பேட்டை, அம்பத்தூா் ஓ.டி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, ஸ்ரீபெரும்புதூா், பெரம்பூா், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களிலுள்ள பயணச்சீட்டு விற்பனை மையங்களில் இந்த ஸ்மாா்ட் அட்டைகள் கட்டணமின்றி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அட்டையை ஆன்லைன், கைப்பேசி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகா் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களில் ரீசாா்ஜ் செய்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி, பேருந்து நடத்துநா்களிடமும் ரீசாா்ஜ் செய்யும் நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஆல்பிஜான் வா்கீஸ், இணை மேலாண் இயக்குநா் செ.நடராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →