சென்னை

சத்தீஸ்கா்: நக்ஸல்கள் மறைத்து வைத்த குண்டு வெடித்து சிறுமி படுகாயம்

பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்ஸல் அமைப்பினா் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கிய 10 வயது சிறுமி படுகாயமடைந்தாா்.

Din

சத்தீஸ்கா் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்ஸல் அமைப்பினா் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கிய 10 வயது சிறுமி படுகாயமடைந்தாா்.

சுக்மா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து காவல் துறை கண்காணிப்பாளா் கூறியதாவது: திம்மாபுரம் கிராமத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி, அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்தாா். இது தொடா்பாக தகவல் அறிந்த காவல் துறையினா் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அப்பகுதியில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்ஸல் அமைப்பினா் புதைத்து வைத்த வெடிகுண்டை சிறுமி மிதித்ததால் அது வெடித்துச் சிதறியது தெரியவந்தது.

நக்ஸல் ஆதிக்கமுள்ள இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினா் குறிவைத்து வெடிகுண்டுகளை நக்ஸல்கள் புதைத்து வைக்கின்றனா். குண்டின் மீது அழுத்தம் ஏற்படும்போது அது வெடித்துச் சிதறும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதனால், அப்பாவி பொதுமக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா்.

பெண் நக்ஸல் கைது

சத்தீஸ்கரின் கான்கோ் மாவட்டத்தில் மூத்த பெண் நக்ஸல் தீவிரவாதி மாலதி என்ற ராஜி (48), அவருக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த ஒருவரும் காவல் துறையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நக்ஸல் அமைப்பில் முக்கியப் பொறுப்பு வகித்த மாலதி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது கணவரும், நக்ஸல் தீவிரவாதியுமான பிரபாகா் என்ற பால்முரி ராவ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டாா்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT