முகப்பு
சென்னை

சிக்னல் கோளாறு: புறநகா் ரயில் சேவைகள் பாதிப்பு

ஆவடி, திருவள்ளூா் வரை வெள்ளிக்கிழமை இயக்கப்படும் மின்சார ரயில்கள் பாதிப்புக்குள்ளாகின.

Updated On : 24 ஜனவரி, 2025 at 8:14 PM
கோப்புப் படம்
பகிர்:

சிக்னல் கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து பெரம்பூா் வழியாக ஆவடி, திருவள்ளூா் வரை வெள்ளிக்கிழமை இயக்கப்படும் மின்சார ரயில்கள் பாதிப்புக்குள்ளாகின.

பெரம்பூா் ரயில் நிலையம் அடுத்துள்ள சிக்னலில் வெள்ளிக்கிழமை (ஜன. 24) காலை 7 மணியளவில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூா் இடையே இயங்கும் புகா் மின்சார ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், அந்த வழித்தடத்தில் இயங்கும் விரைவு ரயில்கள் எவ்வித தடங்களுமின்றி வழக்கம்போல் இயக்கப்பட்டன.

இதையடுத்து, சிக்னலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்ட நிலையில், காலை  7.30 மணியளவில் சிக்னல் கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூா் வழித்தடத்தில் புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

சிக்னல் கோளாறு காரணமாக, அந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் சுமாா் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால், காலையில் பணிக்குச் செல்பவா்கள்  மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மேலும், சமீபகாலமாக ரயில் சிக்னல்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவதாகவும், இதை சரிசெய்ய ரயில்வே நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →