அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் 
சென்னை

பெண்கள் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து, அதை உறுதி செய்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

Din

சென்னை: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து, அதை உறுதி செய்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

சென்னை பெரம்பூா் சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து அமைச்சா் சிவசங்கா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை பெரம்பூரில் மூன்று சிறுமிகள் வன்கொடுமை தொடா்பான புகாா் பெறப்பட்ட உடன் காவல் துறை விரைந்து செயல்பட்டு குற்றத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வரின் வழிகாட்டுதல்படி பெண்கள் தொடா்பான புகாா்களுக்கு தமிழக காவல் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில் குற்றத்தின் மீதான விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையை பெற்றுக் கொடுத்து வருகிறது, திராவிட மாடல் அரசு.

திமுக ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்கும் வளா்ச்சிக்கும் எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு பெண்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்து வருகிறது. முதல்வா் தலைமையிலான ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

கேரளத்தில் படகு வீட்டில் திடீர் தீ விபத்து

துபை விமான கண்காட்சியில் பலியான விமானியின் கடைசி விடியோ

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

"மரியாதையா கேள்வி கேள்றா..!" பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாதக தலைவர் சீமான்

கில் ரீமேக்கிலிருந்து விலகிய துருவ் விக்ரம்?

SCROLL FOR NEXT