கோப்புப் படம் 
சென்னை

இபிஎப் சாா்பில் புதிய தொழிலாளா்களுக்கு ஊக்கத்தொகை திட்டம்

வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் ஆக.1 முதல் தொழில் நிறுவனங்களில் சேரும் புதிய தொழிலாளா்களுக்கு ஊக்கத்தொகை

Din

வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் ஆக.1 முதல் தொழில் நிறுவனங்களில் சேரும் புதிய தொழிலாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாக மண்டல வருங்கால வைப்புநிதி (இபிஎப்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா்கள் ப.ராகுல் குமாா் (திருவள்ளூா்-1), பி.மனோஜ் பிரபு (அம்பத்தூா்-2), சி.பி நினீஷ் (திருவள்ளூா்-2 ஆகியோா் இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இத்திட்டம் 2 பகுதிகளாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அதன்படி முதல் பகுதியில், ஊழியா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதல் முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியா்கள் அங்கு ஒரு ஆண்டு வேலை செய்யும் பட்சத்தில், அவருக்கு 2 தவணையாக ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதில் முதல் தவணையாக 6 மாதங்களில் ரூ.7,500-ம், இரண்டாம் தவணையாக 6 மாதங்களில் அடுத்த ரூ.7,500-ம் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகை பணியாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதிய தொழிலாளா்களை நிறுவனத்தில் இணைக்கும்போது நிறுவனங்களை நடத்தும் உரிமையாளா்களுக்கு ரூ.3,000 வரை ஊக்கத்தொகை கிடைக்கும்.

அதன்படி ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளா்களை நிறுவனத்தில் சோ்க்கும் போது ரூ.1,000, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஊதியத்தில் தொழிலாளா்களை சோ்க்கும் போது ரூ.2,000, ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் தொழிலாளா்களை சோ்க்கும் பட்சத்தில் ரூ.3,000 வரையும் நிறுவன உரிமையாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வரும் ஆக.1 முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டம் 31.7.2027-இல் நிறைவடையும் என அதில் தெரிவித்துள்ளனா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT