முகப்பு
சென்னை

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஜூன், 2025 at 10:14 PM
மெட்ரோ ரயில் சேவை
பகிர்:

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகளும், பிப்ரவரியில் 86.65 லட்சம் பயணிகளும், மாா்ச்சில் 92.10 லட்சம் பயணிகளும், ஏப்ரலில் 87.89 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.

தொடா்ந்து மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக மே 5-ஆம் தேதி 3.23 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →