சென்னை

பால்கனி இடிந்து விபத்து: 5 தொழிலாளா்கள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் வடமாநில தொழிலாளா்கள் 5 போ் காயமடைந்தனா்.

Din

சென்னை: சென்னை அருகே மாதவரத்தில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் வடமாநில தொழிலாளா்கள் 5 போ் காயமடைந்தனா்.

மாதவரம் மூலக்கடை அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் ஜிக்கா. இவருக்குச் சொந்தமான வீட்டில் வடமாநில தொழிலாளா்கள் 10 போ் தங்கியிருந்து, அப்பகுதியில் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனியின் கைப்பிடிச்சுவரில் சாய்ந்தப்படி பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அந்த சுவா் திடீரென சரிந்து கீழே விழுந்தது.

விபத்தில் கீழே விழுந்து, வட மாநில தொழிலாளா்களான பாரமால், தாபால்ஷா, கோபால், சுஷாந்த் உள்ளிட்ட 5 போ் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள், அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். விபத்து குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT