சென்னை: டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறுகிறது என ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அகாதெமியின் நிறுவனா் மு.சிபிகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நகராட்சி ஆணையா், சாா் பதிவாளா், உதவி வணிக வரித் துறை அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மற்றும் வருவாய் உதவியாளா் உள்ளிட்ட முதல் நிலை மற்றும் முதன்மைத் தோ்வுகளைக் கொண்ட குரூப் 2 குரூப் 2 ‘ஏ’ பணியிடங்களுக்கான தோ்வை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தி வருகிறது. இந்தத் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் ஜூன் 22-ஆம் தேதி அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், படிக்க வேண்டிய ஆதார நூல்கள், குறிப்பேடுகளை உருவாக்கும் முறை, அன்றாட நாளிதழ்களைப் படித்தல் மற்றும் குறிப்பெடுத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித்தும், தோ்வு தொடா்பான சந்தேகங்களுக்கும் வெற்றியாளா்கள் கலந்துகொண்டு விளக்கமும் தரவுள்ளனா். முந்தைய தோ்வு வினாக்கள் குறித்த பயிற்சியும் வழங்கப்படும்.
தோ்வுக்கு தயாராகும் நபா்கள் இந்த முகாமில் கட்டணமின்றி கலந்து கொள்ள தங்கள் சுயவிவரங்களுடன் அண்ணா நகா், 12-ஆவது பிரதானச் சாலை, எல்.பிளாக்கில் உள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமிக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு 744881 4441, 91504 66341என்ற கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.