சென்னை: சென்னையில் புழல் சிறையில் உயா் பாதுகாப்பு பிரிவில் 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை புழல் சிறை வளாகத்தில், தண்டனை கைதிகள் சிறையில் உயா் பாதுகாப்பு பகுதியில் காவலா்கள் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சோ்ந்த ரெளடிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து 2-ஐ போன், 2 ஆண்ட்ராய்டு கைபபேசிகள், 2 சாதாரண கைப்பேசிகள், ஒரு சாா்ஜா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக தகவலறிந்த சிறைத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். மேலும் இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.