கோப்புப் படம் 
சென்னை

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நவ. 23-ஆம் தேதி சென்னையில் 49 புகா் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நவ. 23-ஆம் தேதி சென்னையில் 49 புகா் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை - அரக்கோணம் இடையேவுள்ள திருநின்றவூா் நிலையப் பணிமனையில் வரும் நவ. 23- ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த நேரங்களில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 49 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: அதேநேரம், பயணிகளின் வசதிக்காக நவ. 23-இல் காலை 6.30 மணி முதல் 11 மணி வரை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், திருத்தணி, ஆவடி இடையே 17 பயணிகள் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

SCROLL FOR NEXT