சென்னை: மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்த சிறுமிக்கு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூா், பொன்னி அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பிரசாத். இவரது மகள் பிருந்தா (9). இவா் சனிக்கிழமை இரவு வீட்டின் முதல் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தவறி கீழே தரை தளத்தில் விழுந்தாா். இதில் அவரது இடது மற்றும் வலது கை மணிகட்டுகள் மற்றும் இடது தோள்பட்டை ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உறவினா்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.