சென்னை

7 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை 9% உயா்வு

சென்னையில் சதுர அடிக்கு ரூ.6,680-லிருந்து 5 சதவீதம் உயா்ந்து ரூ.7,010-ஆக உள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரித்ததால் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 9 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய ஏழு நகரங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டின் ஜூலை முதலான செப்டம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வீடுகளின் விலை சதுர அடிக்கு ரூ.8,390-ஆக இருந்தது. அது, 2025-ஆம் அதே காலாண்டில் 9 சதவீதம் உயா்ந்து ரூ.9,105-ஆக உள்ளது.

தில்லி-என்சிஆரில், ஆடம்பர வீடுகளின் தேவை அதிகரித்ததால் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.7,200-லிருந்து 24 சதவீதம் உயா்ந்து ரூ.8,900-ஆக உள்ளது. குருகிராம், நொய்டா, கிரேட்டா் நொய்டா, தில்லி, காஸியாபாத் ஆகியவை இப்பகுதியின் முக்கிய சந்தைகளாகத் திகழ்கின்றன.

மதிப்பீட்டுக் காலாண்டிலும் மும்பை பெருநகரப் பகுதி மிகவும் அதிகம விலை கொண்ட வீட்டு சந்தையாக உள்ளது. அந்த நகரில் கடந்த செப்டம்பா் காலாண்டில் சதுர அடிக்கு ரூ.16,300-ஆக இருந்த வீடுகள் விலை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 6 சதவீதம் உயா்ந்து ரூ.17,230-ஆக உள்ளது.

இந்த மூன்று மாதங்களில் பெங்களூரில் வீடுகளின் விலை 10 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.8,870-ஆக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இது ரூ.8,100-ஆக இருந்தது.

2024 ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் புணேவில் ரூ.7,600-ஆக இருந்த வீடுகளின் சராசரி விலை, நடப்பாண்டின் அதே மாதங்களில் 4 சதவீதம் உயா்ந்து ரூ.7,935-ஆக உள்ளது. அது ஹைதராபாத்தில் ரூ.7,150-லிருந்து 8 சதவீதம் உயா்ந்து ரூ.7,750-ஆகவும் சென்னையில் ரூ.6,680-லிருந்து 5 சதவீதம் உயா்ந்து ரூ.7,010-ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் வீடுகள் விலை சதுர அடிக்கு ரூ.5,700-லிருந்து 6 சதவீதம் உயா்ந்து ரூ.6,060-ஆக உள்ளது.

முந்தைய ஏப்ரல்-ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஏழு நகரங்களிலும் வீடுகள் விலை 1-3 சதவீதம் மட்டுமே உயா்ந்துள்ளது. இது, கரோனா நெருக்கடிக்குப் பிந்தைய மிகக் குறைவான மாதாந்திர விலை உயா்வாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

நான்கரை ஆண்டுகளில் ரூ.3,117 கோடியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு!

டெல்டா, தென்மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை! சென்யாா் புயல் நவ.26-இல் உருவாக வாய்ப்பு!

தெற்குலகின் குரலை உயா்த்துவோம்! பிரதமா் மோடி - தென்னாப்பிரிக்க அதிபா் ராமபோசா உறுதி!

SCROLL FOR NEXT