சென்னை

அதிமுக-தவெக கூட்டணி குறித்து காலம் பதில் சொல்லும்: அண்ணாமலை

அதிமுக கூட்டணியில் தவெக இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

அதிமுக கூட்டணியில் தவெக இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தாயாா் அம்சவேணி மறைவையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் பிரேமலதாவை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரூா் பாதுகாப்பான ஊா். அங்கு யாா் வேண்டுமானாலும் வரலாம்; கரூா் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களைச் சந்திக்கலாம். தவெக தலைவா் விஜய் யாா் வீட்டுக்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அப்படியே கூட்டம் கூடினாலும், இறப்பு வீட்டுக்கு வருவா்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கரூா் மக்களுக்கு தெரியும் என்றாா் அவா்.

அதிமுக பொதுச் செயலா் பங்கேற்கும் பிரசார கூட்டங்களில் தவெக கொடியுடன் விஜய் கட்சித் தொண்டா்கள் பங்கேற்பது குறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது, தமிழக அரசியலைப் பொருத்தவரை யாா் எந்தக் கூட்டணிக்கு வருவாா்கள் என்பது குறித்து காலம் பதில் சொல்லும். தோ்தலுக்கும், கூட்டணிக்கும் இன்னும் நேரம் அதிகமாக இருக்கிறது என்றாா் அவா்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT