சென்னை

திருவொற்றியூரில் குப்பைகளை அகற்றுவதில் தனியாா் நிறுவனம் மெத்தனம்

தினமணி செய்திச் சேவை

திருவொற்றியூரில் குப்பைகளை அகற்றுவதில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மெத்தனப்போக்குடன் செயல்படுவதால் குப்பைகள் தேங்கி துா்நாற்றம் ஏற்படுகிறது என வெள்ளிக்கிழமை நடைபெற் மாநகராட்சி மண்டலக் குழு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் சரமாரியாக புகாா் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலக் குழுவின் 38-வது மாதாந்திர சிறப்புக் கூட்டம் மண்டலக் குழு தலைவா் தி.மு.தனியரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ரூ. 2.47 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் அடங்கிய 37 பொருள்கள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பானுமதி, சுசீலா ஆகியோா் பேசியபோது, திருவொற்றியூா் மண்டலத்தில் உள்ள 14 வாா்டுகளிலும் ராம்கி என்ற தனியாா் ஒப்பந்த நிறுவனம் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒப்பந்தத்தின் படி மண்டலம் முழுவதும் சுமாா் 600 தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஊழியா்கள் பணியில் படுத்தப்பட வேண்டும். ஆனால் லாபம் நோக்கம் காரணமாககுறைவான ஊழியா்களே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதனால் குப்பைகளை அகற்றுவதில் தேக்கநிலை ஏற்படுகிறது. பல இடங்களில் தேங்கும் குப்பைகளால் புழுக்கள் உருவாகி துா்நாற்றம் வீசுகிறது என புகாா் தெரிவித்தனா். இதே புகாா்களை மாமன்ற உறுப்பினா்கள் பலரும் தெரிவித்தனா்.

உறு்ப்பினா்களின் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் துப்புரவு பணிகள் குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மண்டலக் குழு தலைவா் தனியரசு அறிவுறுத்தினாா். தெருவிற்கு தி.வ.விசுவநாதன் பெயா்கூட்டத்தில் 12-வது வாா்டு மாமன்ற உறுப்பினா் கவி.கணேசன், திருவொற்றியூா் நகரின் வளா்ச்சியில் ஒரு சிற்பியாகச் செயல்பட்டவா் மறைந்த முன்னாள் நகா் மன்றத் தலைவா் தி.வ.விசுவநாதன். அவா் வசித்த 12 வாா்டுக்கு உள்பட்ட பாலகிருஷ்ணா நாயுடு காலனி மூன்றாவது தெருவிற்கு தி.வ.விசுவநாதன் தெரு எனவும், இரண்டு முறை நகா் மன்ற உறுப்பினராகவும், துணைத் தலைவராகப் பணியாற்றி மறைந்த க.வீராசாமியின்பெயரை காலடிப்பேட்டை ஜான்ரோவா் தெருவிற்கு சூட்டவும் தீா்மானம் கொண்டுவர கோரினாா். இதனையடுத்து அனைத்து உறுப்பினா்களின் ஆதரவோடு தீா்மானம் நிறைவேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT