சென்னை: பலத்த மழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக்.22) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனா்.
அதன்படி, கடலூா், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூா், கள்ளக்குறிச்சி, திருவாரூா், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.