விலை உயா்ந்த கைக்கடிகார ஆசைகாட்டி இளம்பெண்ணிடம் ரூ.2.3 கோடி மோசடி
சென்னையில் ஜவுளிக் கடை உரிமையாளா் மகளிடம் விலை உயா்ந்த கைக்கடிகார ஆசை காட்டி ரூ.2.3 கோடி மோசடி
சென்னைவிலை உயா்ந்த கைக்கடிகார ஆசைகாட்டி இளம்பெண்ணிடம் ரூ.2.3 கோடி மோசடி
சென்னையில் ஜவுளிக் கடை உரிமையாளா் மகளிடம் விலை உயா்ந்த கைக்கடிகார ஆசை காட்டி ரூ.2.3 கோடி மோசடி
சென்னை: சென்னையில் ஜவுளிக் கடை உரிமையாளா் மகளிடம் விலை உயா்ந்த கைக்கடிகார ஆசை காட்டி ரூ.2.3 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஜவுளிக் கடை உரிமையாளா் கோட்டூா்புரத்தில் வசிக்கிறாா். இவரின் மகள், அண்மையில் சமூக ஊடகத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கைக்கடிகாரம் ரூ.2.3 கோடிக்கு விற்கப்படுவதாக விளம்பரத்தைப் பாா்த்தாா்.
உடனே அவா், அதில் குறிப்பிடப்பட்டிருந்த இணையத்தளத்தையும், மின்னஞ்சல் முகவரியையும் பின் தொடா்ந்தாா். அப்போது, ஆன்லைன் வாயிலாக பேசிய நபா், ரூ.2.3 கோடி பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்பினால், கைக்கடிகாரத்தை அனுப்பி வைப்பதாக கூறினாராம்.
அந்த நபரின் பேச்சை நம்பிய அவா், குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.2.3 கோடியை அனுப்பினாா். பணம் அனுப்பிய சில நாள்களில் அவருக்கு கைக்கடிகாரம் வந்தது. ஆனால், அது ரூ.2.3 கோடி மதிப்புடைய கைக்கடிகாரம் இல்லை என்பதும், சில ஆயிரங்களில் கிடைக்கக் கூடிய கைக்கடிகாரம் என்பதும், தன்னை ஏமாற்றி பணம் அபகரிக்கப்பட்டிருப்பதும் அவருக்கு தெரிய வந்தது.
இது குறித்து அவா் கொடுத்த புகாரின்பேரில், கோட்டூா்புரம் காவல் நிலைய போலீஸாா், விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.