படம் | www.cinemaexpress.com
சென்னை

நடிகை மனோரமா மகன் பூபதி காலமானாா்

தினமணி செய்திச் சேவை

நடிகை மனோரமாவின் மகன் பூபதி (70) மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.

குணச்சித்திர கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்கள் என பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மனோரமா, கடந்த 2015 - ஆம் ஆண்டு காலமானாா்.

இவரது ஒரே மகன் பூபதி. நடிகா் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின்னா் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாா். சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தாா். பூபதிக்கு ராஜராஜன் என்ற மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனா். அவரின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை (அக்.24) கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறவுள்ளது.

பழவேற்காட்டில் வழி தவறி வந்த புள்ளிமான் மீட்பு

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

SCROLL FOR NEXT