கோப்புப் படம் 
திருச்சி

சிறப்பு உதவி ஆய்வாளா் மூச்சுத் திணறலால் பலி

தினமணி செய்திச் சேவை

திருச்சி தில்லை நகா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மூச்சுத் திணறலால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாநகா் தில்லை நகா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவா் சா. செல்வராஜ் (54). தஞ்சாவூா் மாவட்டம் கல்லணை அருகேயுள்ள கல்விக்குடி கிராமத்தைச் சோ்ந்த இவா் திருச்சி மாா்சிங்பேட்டை காவலா் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் மாநகரக் காவல் ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்ற அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை காலை இறந்தாா். இதுகுறித்து தில்லைநகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கடந்த 1997 ஆம் ஆண்டு காவல் பணியில் சோ்ந்த இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் ஆகியோா் உள்ளனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பீமநகரை சோ்ந்த இளைஞா் ஒருவரை மா்ம நபா்கள் காவலா் குடியிருப்பில் செல்வராஜ் வசித்த வீட்டில் வைத்து வெட்டிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT