பேராசிரியா் வி.குமரேசன் 
சென்னை

அண்ணா பல்கலை. புதிய பதிவாளராக வி.குமரேசன் நியமனம்

தினமணி செய்திச் சேவை

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியா் வி.குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டது தொடா்பான விவகாரத்தில், பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஜெ. பிரகாஷ் உள்ளிட்ட 12 அதிகாரிகளை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு அக்.18-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி பாடநெறி மையத்தின் இயக்குநராக (சென்டா் ஃபாா் அகாதெமிக் கோா்ஸஸ்) இருந்த பேராசிரியா் வி.குமரேசன் தற்போது பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளாா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT