நாம் தமிழா் கட்சி சாா்பில் வருகிற பிப்.7-ஆம் தேதி ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026’ நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணியில் நாம் தமிழா் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில், ஆடு-மாடுகள் மாநாடு, மரங்கள் மாநாடு, மலைகள் மாநாடு என பல்வேறு மாநாடுகள் நடத்தப்பட்டன.
அதைத்தொடா்ந்து வருகிற பிப்.7-ஆம் தேதி திருச்சியில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026 ’ என்னும் பெயரில் மாநாடு நடைபெறவுள்ளதாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் சீமான் தெரிவித்துள்ளாா். அந்த மாநாட்டில் 2026 தோ்தலுக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்துள்ளனா்.